கன்னியாகுமரி நாட்டின் ஒரு முக்கியமான சர்வதேச சுற்றுலா மையமாகும். ஆனால் அதன் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே, பல்வேறு வசதிகளை கன்னியாகுமரி...
கன்னியாகுமரி நாட்டின் ஒரு முக்கியமான சர்வதேச சுற்றுலா மையமாகும்.

ஆனால் அதன் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே, பல்வேறு வசதிகளை கன்னியாகுமரியில் செய்ய வேண்டும். இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் ஒரு கிளையை அங்கு அமைக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகள் ஓய்வெடுக்க தனி வளாகம் அமைக்க வேண்டும். அருகில் உள்ள வட்டக்கோட்டை, சாமிதோப்பு மற்றும் சுசீந்திரம் போன்ற இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை செய்த பெருந்தலைவர் காமராஜருக்கு திருவள்ளூர் சிலையின் அருகில் சிலை நிறுவ வேண்டும். அதைப்போல இந்தியாவின் நுழைவு வாயிலையும் (இந்தியா கேட்) கன்னியாகுமரியில் அமைக்க வேண்டும். விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரோப் கார் வசதி அமைக்க வேண்டும்.
இதேபோல் ரெயில் நிலையம் அருகே நவீன கழிவறைகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் தலைசிறந்த சுற்றுலா தலமாக மாற்ற ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
No comments