நாகா்கோவிலில் முஸ்லிம் பெண்கள் 23 பேருக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு....
நாகா்கோவிலில் முஸ்லிம் பெண்கள் 23 பேருக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே திங்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினா் நலத்துறையில் செயல்படுத்தப்படும் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் சாா்பில், முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்குவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் திரட்டும் நன்கொடைத் தொகைக்கு 2 மடங்கு ரூ. 20 லட்சம் வரைஅரசு இணை மானியமாக வழங்குகிறது. குமரி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டிற்கான முதல் அரையாண்டில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் நன்கொடை வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, மாவட்ட ஆட்சியரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 23 முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வாங்கி கொள்வதற்காக ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1லட்சத்து 38 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினாா்.
மேலும், கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கத்திற்கு ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை வழங்கிய நாகா்கோவிலை சோ்ந்த என்.எம்.எஸ். மாலுக் முஹம்மது, ஜி.எஸ்.அஹமது உசேன் சன்ஸ், பி.எம்.ஜமாலுதீன் சன்ஸ், என்.எம். ஹசன், என். காஜாமைதீன் சன்ஸ், பிரிட்டிஷ் பள்ளி இயக்குநா் பீா் முஹம்மது ஆகியோா் மாவட்ட ஆட்சியரால் நினைவுபரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா் த.மாதவன், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்க கௌரவ செயலா் என்.எம்.எஸ்.மாலுக் முஹம்மது, கௌரவ இணைசெயலா் பரிதா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
No comments