தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில், தமிழக முதலமைச்சர் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை நடைமுறைபடுத்தி உள்ளார். அதேபோல் மேலும் பல சலுகைகள...
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில், தமிழக முதலமைச்சர் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை நடைமுறைபடுத்தி உள்ளார். அதேபோல் மேலும் பல சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்.
குறிப்பாக பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைகடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் திமுக அரசின், சாதனைகளை விளக்கி, மாநிலம் முழுவதும் திமுகவினர் சாதனை விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சி பகுதியில் இன்று திமுக சாதனை விளக்க கூட்டம் மற்றும் மூன்று நாள்கள் வாகன பிரச்சார பயணம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதியார் எம்.கே.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை மாவட்ட மக்களிடம் விளக்கிடும் விதத்தில் நடைபெற்று வருகின்ற மூன்று நாள் வாகனப் பிரச்சார பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (26-09-2021) குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம் மணவாளக்குறிச்சி பகுதியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் திரு.என்.சுரேஷ்ராஜன் அவர்கள் ஆணைக்கிணங்க மக்களிடம் கழக அரசின் 100நாள் சாதனைகளை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.காரவிளை செல்வம் மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஜஸ்டின் வில்ப்ரட் அவர்களும் விளக்கி பேசினர்.
நிகழ்ச்சியில், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன், மணவை பேரூர் செயலாளர் நிஜாம், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பால மனோகரன், வெள்ளிமலை பேரூர் செயலாளர் தேவதாஸ், ஒன்றிய அமைப்பாளர் சிவசெல்வன், துணை அமைப்பாளர்கள் ராஜகுமார், மனோகரன், டேவிட், மோகன்ராஜ், ஜஸ்டின் மோகன்தாஸ், திரு.பிரபு, ராஜேஷ், கல்யாணமூர்த்தி, சிபி வியாஸ், அனுப் ராஜ், முருகன், குலாம் மைதீன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
திமுக அரசு அமல்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்ட சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.
No comments