மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 58). இவருக்கு சொந்தமான நிலத்தில் உரப்பனவிளையை சேர்ந்த வசந்தா, ...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 58).

இவருக்கு சொந்தமான நிலத்தில் உரப்பனவிளையை சேர்ந்த வசந்தா, அவரது கணவர் சங்கர் ஆகியோர் ஜேசிபியை பயன்படுத்தி பாதை ஏற்படுத்துவதாக மோகன்குமாருக்கு தகவல் வந்தது.
உடனே மோகன்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கண்டித்ததால் கணவன்-மனைவி ஆத்திரமடைந்து அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக மோகன்குமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வசந்தா, அவரது கணவர் சங்கர் மற்றும் ஜேசிபி உரிமையாளர், ஓட்டுநர் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments