Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சியில் பைக் மீது கார் மோதி பெயின்ட் கடை அதிபர் படுகாயம்: சிசிடிவி காட்சி இணைப்பு

மணவாளக்குறிச்சி, கம்மூஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர். இவர் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் பெயின்ட் மற்றும் ஹார்ட்வேர் கடை நடத...

மணவாளக்குறிச்சி, கம்மூஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர். இவர் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் பெயின்ட் மற்றும் ஹார்ட்வேர் கடை நடத்தி வருகிறார்.
நேற்று (05-05-2021) மாலை வேளையில் சந்திர சேகர் கடைக்கு வந்தார். அப்போது நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி வந்த கார், ரோட்டில் இருந்து நிலைதடுமாறி பைக் வந்த சந்திரசேகர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சந்திரசேகர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் காரை ஒட்டி வந்த கருங்கல் ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த மரியதாஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்