குளச்சல் தொகுதியில் கடற்கரை கிராமங்களில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் சனிக்கிழமை வாக்...
குளச்சல் தொகுதியில் கடற்கரை கிராமங்களில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

மக்களவைத் தொகுதி வேட்பாளா் விஜய்வசந்த், குளச்சல் தொகுதி வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோா், திறந்த ஜீப்பில் கடியப்பட்டினம், மணவாளக்குறிச்சி, பெரியவிளை, மண்டைக்காடு, குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, வாணியக்குடி, குறும்பனை உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்ளில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு வாக்கு சேகரித்தனா்.
ஜே.ஜி.பிரின்ஸ் பேசுகையில், நிலத்தடி நீா் ஆதாரத்தை பெருக்கும் வகையில் ஏவிஎம் கால்வாயை தூா் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
மீன்பிடி தொழில் பாதிக்காதவாறு தூண்டில் வளைவு அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் குளச்சலில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனக் கூறினாா். பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.
No comments