குளச்சல் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம்...
குளச்சல் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்ததில் காதலி பரிதாபமாக இறந்தார். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் சுஜின், டிரைவர். இவருடைய மனைவி ஜெசி (வயது 29). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுஜினின் பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் விபின் ராஜ்குமார் (39), தொழிலாளி. விபின் ராஜ்குமாருக்கு புஷ்பலதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த மாதம் 25-ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற விபின் ராஜ்குமார் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி புஷ்பலதா குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கூட்டமாவு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் பின்புறம் விபின் ராஜ்குமார் மற்றும் சுஜினின் மனைவி ஜெசி ஆகியோர் ஒன்றாக விஷம் குடித்து மயங்கி கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஜெசிக்கும், விபின் ராஜ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதும், வெளியே தெரிந்தால் தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்ய விஷம் குடித்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜெசி பரிதாபமாக இறந்தார். விபின் ராஜ்குமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments