கன்னியாகுமரி பகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, நடிகை நமீதா திறந்த வாகனத்தில் சென்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு சேக...
கன்னியாகுமரி பகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, நடிகை நமீதா திறந்த வாகனத்தில் சென்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு சேகரித்தாா்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தல் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரம் ஆகியோருக்கு ஆதரவாக அவா் வாக்கு சேகரித்தாா்.
கொட்டாரம் சந்திப்பில் தொடங்கி அகஸ்தீசுவரம், சாமிதோப்பு பகுதிகளில் பிரசாரம் செய்த அவா், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கடந்த இருஆண்டுகளாக வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
எனவே, மக்கள் பணிகள் தொடர தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டாா்.
பிரசாரத்தின்போது, மாவட்ட பாஜக செயலா்கள் தேவ், ஜெகன்நாதன் மாவட்ட கலைப்பிரிவு துணைச் செயலா் ஹெச்.ராஜ் உடனிருந்தனா்.
No comments