மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சுற்றுசாலையில் நாளை (ஜனவரி 10) “நம்ம ஊர் பொங்கல்” நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து பா,ஜனதா கட்சியின் மாவட்ட ...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சுற்றுசாலையில் நாளை (ஜனவரி 10) “நம்ம ஊர் பொங்கல்” நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து பா,ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறபப்ட்டிருப்பதாவ்து:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பாரம்பரிய ஆச்சார முறைப்படி கோயில்களில் பூஜைகள் கொடியேற்ற, திருவிழாக்கள் ஆராட்டு நிகழ்ச்சிகள் மார்கழி மற்றும் தை மாதங்களில் நடைபெறும்.
பாரம்பரிய விழாக்கள் புறக்கணிக்கப்பட்டால், பக்தர்கள் மனம் புண்படும். இதனை குமரி மாவட்ட இந்துக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே உரிய பாதுகாப்பு, கட்டுபாடுகளுடன் விழாக்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும்.
நாளை தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விவசாய அறுவடை திருவிழாவான பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் சுற்றுசாலையில் நடத்த தீர்மாநிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்து உதவ, மாவட்ட பா.ஜனதா சார்பில் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments