மணவாளக்குறிச்சியில் காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில்...
மணவாளக்குறிச்சியில் காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்தவர் மைதீன்கான் மகன் முகம்மது தாசின்(40). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் நசில்லாவை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு நாலரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நசில்லா மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். முகம்மது தாசின் மதுரையில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
நசில்லாவை முகம்மது தாசின் காதல் திருமணம் செய்து கொண்டதால் நசில்லாவின் உறவினர்கள் நஜ்முதீன், புர்க்கான் ஆகியோர் முகம்மது தாசின் மீது முன் விரோதம் கொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முகம்மது தாசின் பள்ளி ரோட்டில் நிற்கும்போது அங்கு வந்த நஜ்முதீன், புர்க்கான் தரப்பினர் முகம்மது தாசினை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். உடனே அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அப்போதும் நஜ்முதீன் தரப்பினர் வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்து' நீ இங்கிருந்தால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டி இரும்பி கம்பியால் தாக்கிவிட்டு சென்றனர். இதில் படுகாயமடைந்த முகம்மது தாசின் ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து முகம்மது தாசின் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் நஜ்முதீன், புர்க்கான் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments