மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் ஜெனில் (வயது 30), எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷாவை 20...
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் ஜெனில் (வயது 30), எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

இதற்கிடையே ஜெனிலுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜெனிலுக்கும், அவருடைய மனைவி மோனிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் நிலவியதால், மோனிஷா பிரிந்து சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெகுநேரமாகியும் ஜெனில் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர்.
அப்போது படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் ஜெனில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து மாசிலாமணி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெனிலின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெனில் எழுதியதாக பரபரப்பு கடிதம் ஒன்றை உறவினர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். என் மரண வாக்குமூலம் என தலைப்பில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், என் சாவுக்கு காரணமானவர்கள் எனக்கூறி, அவரது மனைவி மோனிஷாவின் குடும்பத்தினர், உறவினர்கள் சிலரையும் மற்றும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புரோக்கர் வேலை பார்க்கும் அதிமுக பிரமுகர் என குறிப்பிட்டுள்ளார்.
மரணத்திற்கு பின் என் குழந்தையை, எனது அப்பாவிடம் ஒப்படைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நான் வீட்டில் இல்லாதபோது, என் வீட்டில் வந்து மிரட்டிய சில நபர்கள் என் மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறி, வாலிபர் ஒருவரின் பெயரையும் அதில் எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
கடிதத்தின் கடைசியில் என் குழந்தைக்காக என்றும் என் உயிர் பிரியாது. மகனே உனக்காக நான் இருப்பேன் என்றும் எழுதப்பட்டிருந்தது.
குறிப்பு என்ற பெயரில், நான் வீட்டில் இல்லாத போது ஆயுதங்களுடன் வந்து மிரட்டி சென்றதுடன், என் குடும்பத்தை தீவைத்து கொளுத்துவோம் என கூறினர், இதை தட்டி கேட்பவர்களையும் தீர்த்து கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆகவே இந்த கடித்தத்தின் படி அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எழுதப்பட்டுள்ளது. இதில் சில உறவுகளை குறிப்பிட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தற்கொலைக்கு முன், தனது நண்பர்கள், உறவினர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் ஜெனில் பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் ஜெனில் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments