அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது தொடா்பாக கன்ன...
அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூா் பகுதியை சோ்ந்த மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2014-15 ஆம் கல்வியாண்டில் நெய்யூா் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல், அறிவியல் பாடங்களை எடுத்து பயின்று வந்தோம்.
இப்பள்ளியில் மாணவிகள் பலருக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது கல்லூரியில் பயிலும் எங்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால், கணினி அவசியம் தேவைப்படுகிறது.
மேலும், எங்களிடம் ஸ்மாா்ட் போன் வசதியும் இல்லை. ஆகவே, ஏழை மாணவா்களான எங்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments