கணபதிபுரம் தெக்கூரை சேர்ந்தவர் சுகுமார் என்ற கண்ணன்(51). இவர் கடந்த 15 வருடமாக வெள்ளிச்சந்தையில் ஒரு தனியார் இடத்தில் தகர கொட்டகை அமைத்து தே...
கணபதிபுரம் தெக்கூரை சேர்ந்தவர் சுகுமார் என்ற கண்ணன்(51). இவர் கடந்த 15 வருடமாக வெள்ளிச்சந்தையில் ஒரு தனியார் இடத்தில் தகர கொட்டகை அமைத்து தேங்காய் கடை நடத்தி வருகிறார்.

அருகில் தேங்காய் இருப்பு வைப்பதற்கு ஓலை கொட்டகையால் குடோன் வைத்துள்ளார். ஆயுத பூஜையை முன்னிட்டு தேங்காய் குடோனை அவர் சுத்தம் செய்தார். பின்னர் குப்பைகளை குவித்து தீ வைத்து கொளுத்தினார்.
குப்பையில் எரிந்த தீ எதிர்ப்பாராமல் குடோன் கூரையில் பற்றிக்கொண்டது. மறுகணம் தீ மளமளவென பரவி கொட்டகை முழுவதிலும் பற்றிக்கொண்டது. உடனே குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்கு பரவும் தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர்.
இதில் குடோனில் இருந்த 750 கிலோ தேங்காய்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட காலி சாக்குகள் எரிந்து சாம்பலானது. வெள்ளிச்சந்தையில் தேங்காய் கடை நடத்தி வரும் சுகுமார் ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments