கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் 7-வது ஆண்டு வி...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் 7-வது ஆண்டு விழா மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு விழா மணவாளக்குறிச்சி கூட்டுமங்கலம் சுரபி அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

நேற்று முன்தினம் (03-09-2020) மாலை 4 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரபி அறக்கட்டளையில் நிறுவனர் மற்றும் தலைவர் சுரபி எஸ்.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குளச்சல் காவல்த்துறை துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பி.சாஸ்த்திரி கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியாக முதல் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் காவல்த்துறை உதவி ஆய்வாளர் பி.ராதாகிருஷ்ணன், மருத்துவர் அருண்குமார், சமூக செம்மல் பங்குதந்தை சர்ச்சில், ஆண்ட்ரூஸ், சேவை செம்மல் கவிஞர் சரலூர் ஜெகன், கணபதிநகர் எஸ்.ராமசுவாமி பிள்ளை, மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு செயல் அலுவலர்கள், அறக்கட்டளை செயலாளர் குமார், நிர்வாகக்குழு உறுப்பினர்களான அசோக், ஷோபியா, பாஸ்கரன், சதானன், சகாய நிர்மலா, ஜெயராணி, எம்மெஸ் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் சுரபி அறக்கட்டளை பொருளாளர் எஸ்.ஜெஸ்ஸி நன்றியுரை வழங்கினார்.

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரபி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் சுரபி செல்வராஜ் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.



No comments