சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த நபர் ஒருவர், பஸ் மூலம் குமரி மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்...
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த நபர் ஒருவர், பஸ் மூலம் குமரி மாவட்டத்திற்கு வந்தார். அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து அவருடன் பஸ்சில் பயணம் செய்த 35 பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே பஸ்களில் பயணம் செய்யும்போது பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து, சானிடைசர் பயன்படுத்தி பாதுகாப்பான நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
வெளியிடங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு இ-பாஸ்களின் உண்மை தன்மை குறித்து தீவிர சோதனை நடத்தப்படுகிறது. முறையான இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. நேற்று முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 262 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அபராதமாக ரூ.26 ஆயிரத்து 200 வசூலானது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை மொத்தம் 31 ஆயிரத்து 480 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 97 பேர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பினர். குமரியில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 705 பேர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வெளியிடங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த 9 ஆயிரத்து 374 நபர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments