மணவாளக்குறிச்சி பகுதி மக்கள் கடந்த ஒருவார காலமாக மிகவும் அச்சத்துடன் உள்ளனர். அந்த பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடுவதாக கூறப்படுகிறது. மர...
மணவாளக்குறிச்சி பகுதி மக்கள் கடந்த ஒருவார காலமாக மிகவும் அச்சத்துடன் உள்ளனர். அந்த பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடுவதாக கூறப்படுகிறது.
![]() |
மர்ம விலங்கினால் கழுத்தில் கடிக்கப்பட்டு பலியான ஆடு |
கடந்த 4 நாட்களுக்கு முன்பு மணவாளக்குறிச்சி பகுதியில் மர்ம விலங்கு ஒன்று ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளது. மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்த சிலுவைமுத்து என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 2 ஆடுகளை கடித்து கொன்றுள்ளது.
ஆண்டார்விளை பகுதியில் ஒரு வீட்டில் வான்கோழி ஒன்றும் மர்மனான முறையில் பலியாகியுள்ளது. இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் மர்ம விலங்கை தேடி வருகின்றனர்.
![]() |
மர்ம விலங்கின் கால் தடம் |
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டின் கழுத்து பகுதியை அந்த மர்ம விலங்கு கடித்துள்ளது. அதில் அந்த ஆடு இறந்துள்ளது. அந்த மரம் விலங்கின் காலடி தடம் வனவிலங்கு போன்ற தோற்றத்தில் உள்ளது. இதனால் மணவாளக்குறிச்சி பகுதி முழுவதும் மக்களிடையே பயம் ஏற்பட்டுள்ளது.
மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, அந்த மர்ம விலங்கு, கருஞ்சிறுத்தையாக இருக்கக் கூடும். அது பிள்ளையார்கோவில், ஐஆர்இ பகுதி, பெரியவிளை பகுதிகளில் சுற்றிவந்ததாகவும், பின்னர் சக்கப்பத்து, வடக்கன்பாகம் வழியே சென்று வருவதாகவும் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை.
![]() |
4 நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்ட ஆடுகள் |
ஊரடங்கு அமலில் உள்ளதால் மாலை 7 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் அறவே இல்லாத காரணத்தாலும், வானக போக்குவரத்தும் இல்லாததால், ஏதோ வனவிலங்கு ஊருக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் மர்ம விலங்கை தேடி வருகின்றனர். இந்நிலையில் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினரால் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் மணவாளக்குறிச்சி பகுதி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
![]() |
மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினரால் வைக்கப்பட்டுள்ள கூண்டு |
No comments