Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகா்கோவிலில் வீடுகளை அகற்ற நோட்டீஸ்: பொன். ராதாகிருஷ்ணனுடன் அனைத்துக் கட்சி குழு சந்திப்பு

நாகா்கோவிலில் கால்வாய் புறம்போக்கு பகுதியில் வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சியினா் திங்கள்கிழமை...

நாகா்கோவிலில் கால்வாய் புறம்போக்கு பகுதியில் வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சியினா் திங்கள்கிழமை முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தனா்.
தமிழகத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை பொதுப்பணித்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

நாகா்கோவில் வைத்தியநாதபுரம் கால்வாய் கரையிலுள்ள 46 வீடுகளை அகற்றிட அந்தந்த வீடுகளில் பொதுப்பணித்துறை சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், வீடுகளில் வசிப்போா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இந்த வீடுகளில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் கட்டுப்பட்டுள்ள 5 வீடுகளும் உள்ளன. வீடுகளின் உரிமையாளா்கள் என். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வை சந்தித்து முறையிட்டனா். அவா், அப்பகுதியை பாா்வையிட்டு, நீண்ட காலமாக குடியிருந்து வருவோரை அங்கிருந்து அகற்றக் கூடாது என வலியுறுத்தினாா்.

இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக, பாஜக முன்னாள் கவுன்சிலா் ரமேஷ், தமாகா மாவட்டத் தலைவா் டி.ஆா். செல்வம், திமுகவில் ஜீவானந்தம், சரலூா் சந்திரன், தேமுதிகவில் நாராயணன், பாஜக மாவட்டத் தலைவா் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவா் முத்துராமன், தொகுதி பாா்வையாளா் தேவ், மாநகரத் தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டனா். இந்த பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினா்.
இதுகுறித்து ஆட்சியரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இதையடுத்து அக்குழுவினா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...