குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இன்று (11-09-2021) 8 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த இரு...
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இன்று (11-09-2021) 8 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் கூடுவதை தவிர்க்க வழிபாட்டு தலங்கள் மற்றும் விழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் 3-வது அலை வருவதை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்திற்கும் அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும், தனிநபர்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபடவும், தனியாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சிலைகளை அறநிலையத்துறை ஆலயங்களில் வழிபாட்டிற்கு பின்னர் வைத்தால் அவற்றை முறைப்படி, அறநிலையத்துறை மூலம் அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கலெக்டர் மற்றும் எஸ்பி இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டதுடன், பேச்சுவார்த்தை நடத்தி அரசிற்கு ஒத்துழைப்பு தரக் கேட்டுக் கொண்டனர்.
இதன்படி, இந்து இயக்க நிர்வாகிகளும், இதனை ஏற்று வீடுகள் மற்றும் கோயில்களில் ஆலய நிர்பாக அனுமதியுடன் சிலைகள் வைத்து ஊர்வலம் இன்றி, தனியாக அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்க ஒப்புக்கொண்டனர்.
எனினும், சிலைகள் வைக்கப்படுவதை கண்காணிக்க கடந்த 9-ம் தேதி இரவு முதல் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா, இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் மாவட்டம் முழுவதும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஒன்றரை அடி முதல் 3 அடி உயரம் கொண்ட சுமார் 822 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

இந்த சிலைகள் நாளை 12-ம் தேதி அந்தந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
மணவாளக்குறிச்சியில் இந்து முன்னணி சார்பில் ஆண்டு தோறும் 10 சிலைகள் வைக்கபப்ட்டு, பிற இடங்களில் கரைக்கப்படும் நாளிற்கு முன்னதாக கரைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று காலை 8 சிலைகளை ஆற்றில் கரைக்கப்பட்டன. இதனை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments