மணவாளக்குறிச்சி, சக்கப்பத்து பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்று ...
மணவாளக்குறிச்சி, சக்கப்பத்து பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்று வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்பெற்ற விவசாயிகள், அந்த தொகையினை திரும்ப செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றனர். இதற்கான சான்று நேற்று பயனாளிகளிடம் வழங்கப்பட்டது.
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை வங்கி மூலம் 720 பயனாளிகள் கடன்பெற்ற தொகை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழை சங்க தலைவர் தலைவர் ஐயப்பன் (எ) பாம்பே கண்ணன், செயலாளர் (பொறுப்பு) ரஜினிதேவி ஆகியோர் வழங்கினர்.
பயனாளிகள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை சென்றனர்.
News
"போர்முரசு" முருகன்
மணவாளக்குறிச்சி
No comments