ஐதராபாத்தில் உள்ள துண்டிக்கல் விமான படை நிலையத்தில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங...
ஐதராபாத்தில் உள்ள துண்டிக்கல் விமான படை நிலையத்தில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.

அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசிய போது, கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் அணுகுமுறையானது, அந்த நாட்டின் நோக்கங்களை பிரதிபலிக்கிறது.
இது புதிய இந்தியா. எந்த விதமான அத்துமீறல், ஆக்கிரமிப்பு அல்லது ஒருதலைப்பட்சமான செயல்களுக்கு பொருத்தமான பதிலடியை இந்த புதிய இந்தியா கொடுக்கும். இந்த விவகாரத்தில் இந்தியா பாராட்டுக்களை பெற்றுள்ளது. பல நாடுகளின் ஆதரவையும் இந்தியா கண்டறிந்துள்ளது.
இரு தரப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு பல கட்டங்களாக ராஜ தந்திர ரீதியிலும், ராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று இருக்கின்றன. ஆனாலும் நாங்கள் மோதலை விரும்பவில்லை. அமைதியை விரும்புகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
ஆனால், நாட்டின் சுயமரியாதைக்கு எந்த பங்கம் ஏற்படுவதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறினார்.
No comments