வெள்ளிச்சந்தையில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வெள்ளிச்சந்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் பஞ்., தலைவர் தா...
வெள்ளிச்சந்தையில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வெள்ளிச்சந்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராமிய விழிப்புணர்வு கூட்டம் பஞ்., தலைவர் தாமஸ் கென்னடி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். அடிக்கடி சானிட்டைசர் அல்லது சோப்பால் கைககளை சுத்தம் செய்ய வேண்டும். பைக்கில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும்.
கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போட மறக்கக் கூடாது. வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவைக்கு அதிகமான நகைகள் மற்றும் பணத்தை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா வைக்க முடிந்தவர்கள் கேமரா வைத்துக் கொள்ளவும். இதன்மூலம் அருகிலுள்ள வீடுகளை கூட கண்காணிக்க முடியும்.
இதனால் பெரும்பாலான குற்ற செயல்களை தடுக்க முடியும். சிறிதளவே நகை வைத்திருக்கும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். நகைகளை அணிந்து வெளியில் செல்லும்போது கழுத்தை முந்தாணையால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல அறிவுரைகளை மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமபகுதி மக்களுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் வெள்ளிச்சந்தை வில்லேஜ் ஆபிசர் பீனா, வெள்ளிச்சந்தை எஸ்.ஐ. தங்கராஜா, வெள்ளிச்சந்தை பஞ்., உறுப்பினர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments