கழிவறையில் அடைத்துவைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷி...
கழிவறையில் அடைத்துவைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷிபூரை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கழிவறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்தார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் வெளியே காணவில்லை என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் திடீரென நரேஷ்குமாரின் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கழிவறைக்குள் அடைபட்டுக்கிடந்த அவரது மனைவியை மீட்டனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக அடைபட்டுக்கிடந்ததால் அப்பெண்ணால் எழுந்து நிற்கவே முடியவில்லை. மனநலம் வேறு பதிக்கப்பட்டிருந்ததால், அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
நரேஷ்குமாரை கைது செய்த போலீசார், மனைவியை சித்திரவதை செய்தது ஏன் என்று கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கு முன் அப்பெண்ணை திருமணம் செய்த நரேஷ்குமாருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
No comments