தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கிறது. பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட தளர்வுகள் பற்றி இன்று மாலை முத...
தமிழ்நாட்டில் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கிறது. பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட தளர்வுகள் பற்றி இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பில், "தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படும். ஞாயிற்றுகிழமைகளில் முழு முடக்கம் இல்லை.
கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments