மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும், ஸ்மார்ட் வகுப்பு திறப்பு விழாவு...
மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும், ஸ்மார்ட் வகுப்பு திறப்பு விழாவும் நேற்று (24-08-2019) பள்ளியில் வைத்து நடைபெற்றது.

விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக நாகர்கோவில் பிகேசி கல்லூரி பேராசிரியை திருமதி டாக்டர் சுபத்திரா கலந்து கொண்டார். ஸ்மாட் வகுப்பை வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் திறந்து வைத்தார்.

இதற்கான நன்கொடையினை பள்ளியின் முன்னாள் மாணவர்களான, இஸ்ரோ விஞ்ஞானி பென்சிகர் ராஜன், தொழிலதிபர் ஆர்.கோலப்பன், தொழிலதிபர் பி.ஜீன், மக்கள் தொடர்பாளர் முகம்மது ராபி ஆகியோர் வழங்கியிருந்தனர்.
நன்றியுரை தலைமையாசிரியை லலிதாபாய் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments