மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (12-01-2021) உத்தரவிட்டுள்ளது. புதிய வ...
மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (12-01-2021) உத்தரவிட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் பல ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில் இன்றைய வழக்கின் விசாரணையில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments