Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி மாவட்ட பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?

பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய தமிழக அரசின் நெறிமுறைகள் குறித்து குமரி மாவட்ட தலைமை ஹாஜி அபுசாலி அறிவிப்பு வெள...

பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய தமிழக அரசின் நெறிமுறைகள் குறித்து குமரி மாவட்ட தலைமை ஹாஜி அபுசாலி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் இருந்து பள்ளி வாசலுக்கு வர அனுமதியில்லை. மசூதிக்குள் 6 அடி சமூக இடைவெளிவிட்டு (100 சதுர மீட்டர் பரப்பளவில் 20 நபர்கள் என்ற கணக்கில்) தொழுகை நடத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தொழுகைக்கு வருவதை தவிர்க்கவும்.
தொழுகை நடத்த வருபவர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து, கால்களை கழுவிய பின்னரே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவர். கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கழிவறையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை உள்ளே கொண்டு வரவும், உண்ணவும் அனுமதி இல்லை.

காலணிகளை தரையில் கழற்றிவிடாமல் அதற்குரிய இடத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி வாசல் வளாகத்தில் எச்சில் உமிழ்வது கூடாது. இருமல், தும்மல் வரும்போது பயன் படுத்தும் கைக்குட்டை, டிஸ்யூ தாள்களை கீழே போடாமல் தங்களிடமே வைத்திருந்து எடுத்துச் செல்ல வேண்டும். மசூதி மிம்பர் (3 படிக்கட்டு கொண்டது), அலமாரி உள்ளிட்ட இடங்களில் புத்தகங்கள், தொப்பி, மிஸ்வாக் தஸ்பீஹ்மணி, செல்போன் போன்ற எதையும் வைக்கக்கூடாது.
மசூதிக்குள் பாய், விரிப்புகள் அகற்றப்பட்டு, மின்விசிறிகள் மட்டுமே இயங்க வேண்டும். பாங்கு சொல்லப்பட்டு 10 நிமிடம் கழிந்ததும் (மக்ரிபு தவிர) ஜமாத் மற்றும் ஜுமூஆ (வெள்ளிக்கிழமை மதிய தொழுகை) ஆரம்பிக்கப்படும். ஜூமுஆவில் மிம்பர் குத்பா மற்றும் பர்ளு தொழுகை மட்டும் சுருக்கமாக நடை பெறும். இரண்டாம் ஜமாத் நடைபெறாது. 

பயான், சொற்பொழிவு, விழாக்கள், மத்ரஸா மற்றும் வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. மசூதி வளாகத்தில் திருமணத்து என (நிக்காஹ் மஜ்லீஸூ) ஒதுக்கப்படும் இடத்தில் ஒரு நேரத்தில் ஒரு திருமணம் என்ற முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி திருமணம் நடத்த வேண்டும்.
பள்ளிவாசல் வளாகத்தில் ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொள்வதும், ஆரத்தழுவிக்கொள்வதும் கூடாது. திருமணம் முடிந்த உடன் மசூதி பூட்டப்படும். மறுநேரம் வரும்வரை திறக்கப்படாது. ஒவ்வொரு ஜமாத் முடிந்த உடன் தரையை சுத்தம் செய்ய வேண்டும். வாகனங்களை மசூதிக்குள் ளும், மசூதி அருகிலும் நிறுத்தக்கூடாது. தொழில் முடக்கம், வருவாய் இழப்பு, வேலையின்மை ஆகியவை காரணத்துக்காக தமிழக அரசு சில தளர்வுகளை அறி வித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில் தொழுகை நடத்தக்கூடியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு விதிகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...