கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சையத் ஹுசைன் அவர்கள் பிள்ளையார் கோவில் சந்திப்பு பகுதியில் ரோந்து ச...
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சையத் ஹுசைன் அவர்கள் பிள்ளையார் கோவில் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றார்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற வரை பிடித்து விசாரித்த போது அவர் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த எபிஜான் (வயது 32) என்பதும், அவரை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே அவரை கைது செய்து, அவர்களிடமிருந்த 1.180 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
No comments