மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் மணிகண்டன் பிரசாத் (வயது 34) இவர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த...
மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் மணிகண்டன் பிரசாத் (வயது 34) இவர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அம்மாண்டிவிளை தனியார் கல்லூரி அருகே வந்தபோது திவண்டாகோட்டையை சேர்ந்த அஜய் (20) சேரமங்கலத்தை சேர்ந்த சேகர் இருவரும் வழிமறித்து மோட்டார் சைக்கிளை இரவல் கேட்டு உள்ளனர்.
இதற்கு மணிகண்ட பிரசாத் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகள் பேசி மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த மணிகண்ட பிரசாத் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மணிகண்ட பிரசாத் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
மணவாளக்குறிச்சி போலீசார் அஜய் மற்றும் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments