வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்...
வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) வரும் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
டான்செட் தேர்வு எழுத விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொலைத்தூரக் கல்வி திட்டத்தின் மூலம் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.
டான்செட் தேர்வு வரும் மே மாதம் 15 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும்.
இதற்கு https://tanct.annauniv.edu/tancet என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பொது, எம்பிசி, பிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணமாக ரூ.600. செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்புபவர்கள் அவற்றிற்கு தனித்தனியே ரூ.600 அல்லது ரூ.300 செலுத்த வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வானது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறும்.
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 2 ஆம் தேதி வெளியிடப்படலாம் எனவும், அப்படி வெளியிடப்பட்டால் அன்றே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments