மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் தலைவர் கந்தப்பன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் ரெத்னபாண்டியன், செயல...
மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் தலைவர் கந்தப்பன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் ரெத்னபாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சசீதரன், சட்ட ஆலோசகர் ராஜரத்னம் முன்னிலை வகித்தனர்.

துணைத்தலைவர்கள் ஸ்ரீபத்மநாபன், ஈஸ்வரதாஸ், கிருஷ்ணசாமி ஆசான், இணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், வேலாயுத விமலகுமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வரும் மாசிக்கொடையை முன்னிட்டு பக்கத்து ஊர் கோயில்களிலிருந்து பக்தர்கள் கொண்டு செல்லும் யானை மீது சந்தனக்குடம் பவனி, மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சந்தன பவனிக்கு வழக்கம்போல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் அனுமதியளிக்க கேட்பது, கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு கடலில் கால் நனைக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கேட்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments