Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

வெள்ளமடம் அருகே மகன் இறந்த துக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

வெள்ளமடம் அருகே கரையான்குழியை சேர்ந்தவர் முருகன் (வயது 44), டிரைவர். இவருடைய மனைவி சுகுணா, இவர்களுக்கு ஆகாஷ் (17), ஜெயப்பிரகாஷ் (14) என 2 மக...

வெள்ளமடம் அருகே கரையான்குழியை சேர்ந்தவர் முருகன் (வயது 44), டிரைவர். இவருடைய மனைவி சுகுணா, இவர்களுக்கு ஆகாஷ் (17), ஜெயப்பிரகாஷ் (14) என 2 மகன்கள் உண்டு.
கடந்த 5 மாதத்திற்கு முன் முருகன் தனது 2-வது மகன் ஜெயபிரகாசுடன் மோட்டார்சைக்கிளில் அருகில் ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜெயபிரகாஷ் படுகாயமடைந்து இறந்தார்.
தன் கண் முன்னாலேயே மகன் இறந்த சம்பவம் முருகனை பெரிதும் பாதித்தது. 
இதையடுத்து, முருகன் கடந்த சில மாதங்களாக மனம் உடைந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முருகன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...