Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சுருளகோடு அருகே விபத்தில் இளைஞா் பலி

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். பெருஞ்சாணி அருகேயுள்ள குற்றியாணி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் (3...

கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு அருகே நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெருஞ்சாணி அருகேயுள்ள குற்றியாணி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் (32), சுபின் (29) இவா்கள் எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வந்தனா். 
இருவரும் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் சுருளகோடு நோக்கி சென்று கொண்டிருந்தனராம். ஜெகன் மோட்டாா் சைக்கிளை ஓட்டியுள்ளாா். 
சுருளகோடு சந்திப்பு வளைவில் சென்றபோது தடிக்காரன் கோணம் நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. 
பின்னா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுபின் உயிரிழந்தாா். ஜெகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்