மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் “பாம்பே பிரிண்டர்ஸ்” என்ற பெயரில் ப்ரிண்டிங்க் பிரஸ், ஜெராக்ஸ் மற்றும் ஸ்டேசனரி ஷாப் நடத்தி வந்தவர் திரு...
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் “பாம்பே பிரிண்டர்ஸ்” என்ற பெயரில் ப்ரிண்டிங்க் பிரஸ், ஜெராக்ஸ் மற்றும் ஸ்டேசனரி ஷாப் நடத்தி வந்தவர் திரு. அல்போன்ஸ் அவர்கள்.

இவர், மணவாளக்குறிச்சி ஆசாரிதெரு பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், டைசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (23-10-2020 – வெள்ளிக்கிழமை) மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார். சாப்பிட்டு முடித்து வீட்டின் முன்புறம் சற்று நேரம் இருப்பது வழக்கம். அதேபோல் அன்றும் இளைப்பாற இருந்தார்.
அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கீழே சரிந்தார். இதைபார்த்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்து, அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
அல்போன்ஸ் அவர்களின் திடீர் மரணம் அவரது குடும்பத்தார்களையும், அப்பகுதியினரையும் அதிர்ச்சிக்குள்ளானது. அனைவரிடமும் அமைதியாகவும், அன்போடும் இருந்து வந்தவர்.
அன்னாரது உடல் நல்லடக்கம் நேற்று (24-10-2020 – சனிக்கிழமை) காலை 11 மணியளவில் மணவாளக்குறிச்சி, சக்கப்பற்று கல்லறை தோட்டத்தில் சிறப்பு ஜெபத்துடன் நடைபெற்றது.
அவரது இறுதி சடங்கில் குடும்பத்தார்களும், மணவாளக்குறிச்சி பகுதி பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அருமை அண்ணன் அல்போன்ஸ் அவர்களுக்கு “குமரி இன்ஃபோ” தளம் மற்றும் “எம்மெஸ் நெட்வொர்க்” சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments