மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னவிளையில் அழகிய இ...
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னவிளையில் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் அமைப்போடு காணப்படுவது கடற்கரை. இங்கு விடுமுறை நாள்கள் மட்டுமின்றி வார நாட்களிலும் மக்கள் கடலை ரசிக்க வருவதை காணலாம்.
தற்போது கடல் உள்வாங்கி காணப்படுவதுடன், அலை வேகம் சில நேரங்களில் அதிகமாவும், சில நேரம் குறைவாகவும் இருந்து வண்ணம் உள்ளது. மேலும் கடற்கரை ஓரங்களில் சிறிய வகை மீன்கள் உயிருடனோ, இறந்த நிலையிலோ கரை ஒதுங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஓரளவு பெரிய அளவிலான ஆமை ஒன்று கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கியது. ஆமை கடல் அலையில் சிக்கி, பாறையில் அடித்து வந்ததாக தெரிகிறது. அதன் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்து வந்த அடையாளம் இருந்தது.
கரை ஒதுங்கிய ஆமையை மக்கள் அருகில் சென்று பார்த்தனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர்.

















No comments