கொடைக்கானலில் 10ம் வகுப்பு பயிலும் மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளர். திண்டுக்கல் மாவட்டம் கொ...
கொடைக்கானலில் 10ம் வகுப்பு பயிலும் மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் போது அவ்வழியே டீ கடை ஒன்றில் வேலை பார்க்கும் அஸ்கர் அலி என்பவர் மாணவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நாளாடைவில் இந்த பழக்கம் காதலாக மாறாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைடுத்து கடந்த நில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருக்கும் போது சிறுமி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் பதறிய பொற்றோர் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தபோது மகள் கர்ப்பமடைந்த செய்தி பெற்றோருக்கு தெரியவருகிறது.
பிறகு சிறுமியிடம் விசாரித்த போது அஸ்கர் அலி பழகி சிறுமியை ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அஸ்கர் அலியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















No comments