குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை மலையோர பகுதி வழியாக கேரளாவிற்கு மூன்று இருசக்கர வாகனங்களில் பதுக்கி கடந்த முயன்ற நாற்பது கிலோ கஞ்சா பறிமுதல்...
குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை மலையோர பகுதி வழியாக கேரளாவிற்கு மூன்று இருசக்கர வாகனங்களில் பதுக்கி கடந்த முயன்ற நாற்பது கிலோ கஞ்சா பறிமுதல். ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை மலையோர பகுதியான களியல்- நெட்டா சோதனை சாவடியின் அருகே களியல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு இளைஞர்கள் போலீசாரை பார்த்தும் தப்பி ஓட முயற்சித்தனர்.
போலீசார் அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இரு சக்கர வாகனங்களில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த நாற்பது கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
6 இளைஞர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர்கள் விபின், ஷைன் ஜோஸ், விசாக், ஜிஸ்ணுராஜ், ஆகியோர் கேரளாவை சார்ந்தவர்கள் என்றும் பெர்ஜின், பெர்லின் ஆகியோர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் அனைவரும் ஊரடங்கு நேரத்தில் மது கிடைக்காததால் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி அதையே தொழிலாக தொடர்ந்ததும் தெரிய வந்துள்ளது. போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















No comments