Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

இந்தியாவைப் பிளவுபடுத்துகிறார் பிரதமர் மோடி: நோபல் அறிஞர் விமர்சனம்

பிரதமர் மோடி இந்திய நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தி வருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph E. Stiglitz) ...

பிரதமர் மோடி இந்திய நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தி வருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph E. Stiglitz) விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதார அறிஞரான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கடந்த 2001ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 
இந்நிலையில் கொரோனா தொற்றுநோயை அரசு கையாண்டைதைக் குறித்து தனியார் அமைப்பு நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் இந்தியாவை இந்து முஸ்லீம் என மத அடிப்படையில் பிரதமர் மோடி பிளவுபடுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். 

"அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். பிரிவினை அரசியல் என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு எதிரானது. இந்திய நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை நிறுத்த பிரதமர் மோடி முயல்கிறார். 
இந்தப் பிரிவினை அரசியல் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் என்றென்றும் பலவீனப்படுத்தும்." என ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கம் அதன் நோக்கத்தில் இருந்து தவறிவிட்டது. பொதுமுடக்கம் இந்தியாவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட ஸ்டிக்லிட்ஸ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி தொற்றுநோயை மேலும் அதிகப்படுத்தியது என்று தெரிவித்துள்ளார். 
தொற்றுநோயைக் கையாளாமல் பொருளாதாரப் பின்விளைவுகளைச் சமாளிக்க முடியாது என்பதால் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இந்திய அரசுக்கு அவர் அறிவுறுத்தினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்