மணவாளக்குறிச்சி அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் பைக்கும் காரும் நேரடியாக மோதிக்கொண்டதில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த வாலிபர் இறந்து போனா...
மணவாளக்குறிச்சி அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் பைக்கும் காரும் நேரடியாக மோதிக்கொண்டதில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த வாலிபர் இறந்து போனார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குளச்சல் அருகே மேலரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் கணேசன்(49). இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி காரில் ஆசாரிப்பள்ளத்தில் இருந்து வெள்ளமோடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
வெள்ளிச்சந்தை நிலவடி குளத்தின் அருகே வரும்போது கணபதிபுரம் தெக்கூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் அரவிந்த்(23) நேர் எதிரே வேகமாக பைக் ஓட்டிவந்து காரில் மோதியுள்ளார்.
இதில் தூக்கி வீசப்பட்டு அரவிந்த் படுகாயமடைந்தார்.
காரின் வலது பக்கம் மோதியதில் டிரைவர் பகுதி சேதமடைந்தது. இதில் டிரைவர் காயமடைந்தார். இருவரையும் கணேசன் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் நேற்று காலை இறந்து போனார். இதுகுறித்து கணேசன் வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments