நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் 29 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுத...
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் 29 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி பெறாமலும், பார்க்கிங் வசதிகள் இல்லாத வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் உள்ள கட்டிடங்கள், வடசேரியில் உள்ள காம்ப்ளக்ஸ், செட்டிக்குளம், கோட்டார் உட்பட பல பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செட்டிக்குளம் பகுதியில் உள்ள 6 உரிமையாளர்களின் வணிக கட்டிடங்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஆர்டிஓ மயில் ஆகியோர் தலைமையில் நகரமைப்பு அலுவலர், நகரமைப்பு ஆய்வாளர்கள் சீல் வைத்தனர்.
இதில் 14 கடைகள் செயல்பட்டு கொண்டிருப்பதும், 15 கடைகள் செயல்படாமல் இருப்பதும் என்று 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. செட்டிகுளம் பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
















No comments