Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கர்நாடகாவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு

கர்நாடகாவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில...

கர்நாடகாவில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறவினர்கள் இன்று மனு அளித்தனர்.
கடந்த 22-ம் தேதி கர்நாடக ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை மீட்க நடவடிக்கை கோரி தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் தலைமையில் உறவினர்கள் இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில்:-

கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைதோப்பைச் சேர்ந்த ராபின்சன்(36), கன்னியாகுமரியைச் சேர்ந்த டென்னிஸ்(56), வாவுத்துறையைச் சேர்ந்த அருள்ராஜ் உட்பட 10 மீனவர்கள் இந்தியன் என்ற விசைப்படகில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கடந்த 19-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். 
23 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு சில படகுகளில் வந்த கர்நாடக மீனவர்கள், குமரி மீனவர்களை கடலுக்குள் சுற்றி வளைத்து ஆயுதங்களுடன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படகு ஓட்டுனர் ராபின்சன் படுகாயம் அடைந்தார். 

பின்னர் குமரி மீனவர்கள் 10 பேரையும் பிணைகைதிகளாக கர்நாடகாவின் மால்பே பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்களை கடலோர காவல் படையிடம் ஒப்படைத்துள்ளனர். குமரி மீனவர்கள் காயம் அடைந்திருந்ததால் கடலோரக் காவல் குழும போலீஸார் உடுப்பி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் மீனவர்களை ஒப்படைத்தனர். 
பின்னர் கடந்த 23-ம் தேதி குமரி மீனவர்கள் மீது, கர்நாடக மீனவர்களை தாக்கியதாக கொலை முயற்சி, அத்துமீறல், கூட்டாக சேர்ந்து கடலுக்குள கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மீனவர்களை தங்கள் உறவினர்களுடன் செல்பேசியில் கூட பேச அனுமதிக்கவில்லை. தற்போது 10 மீனவர்களும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
எனவே குமரி மீனவர்கள் 10 பேரையும் விடுவிக்க தமிழக, கர்நாடக அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்