Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

வெள்ளிச்சந்தை அருகே திருமண ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் தங்கதுரை (வயது 32), கொத்தனார். திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், கடந...

வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் தங்கதுரை (வயது 32), கொத்தனார். திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கதுரை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி குடும்பத்தினரிடம் கூறி வந்ததாக தெரிகிறது. குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு தங்கதுரை படுக்கை அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து தங்கதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்கதுரை திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்