நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடியது. கொல்லங்கோட்டில் மதுபிரியர்கள் கூட்டத்தால் களை கட்டியது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொட...
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடியது. கொல்லங்கோட்டில் மதுபிரியர்கள் கூட்டத்தால் களை கட்டியது.

கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மட்டுமே விற்பனை நடந்தது. நிபந்தனைகளை பின்பற்றவில்லை என கூறி மதுக்கடைகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதோடு, ஆன்லைனில் மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மீண்டும் 16-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் 16-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறந்த பிறகு நாகர்கோவில் உள்பட குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நாகர்கோவிலில் நேற்று ஏராளமான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மதுபிரியர்கள் அதிகமானவர்கள் வருவார்கள். அவ்வாறு சேரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பும் கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால், டாஸ்மாக் கடைகள் முன் கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
No comments