குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஆரல்வாய்மொ...
குமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் 200 பேர் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் கன்னியாகுமரி பகுதியில் லாட்ஜிகளில் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

நோய் தொற்று உறுதியானவர்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் .அனுமதிக்கப் படுகிறார்கள். மாவட்டத்தில் முதல்முதலாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 16 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் வெளி மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் 4 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களில் ஒருவர் கத்தாரில் இருந்தும், மற்றொருவர் மாலத்தீவில் இருந்தும் வந்தவர்கள் ஆவார்கள். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
|
குமரிமாவட்ட கொரோனா நிலவரம்
|
|
|
பரிசோதனைகள்
|
8, 078
|
|
வீட்டு தனிமை
|
277
|
|
மொத்த பாதிப்பு
|
37
|
|
புதியது
|
2
|
|
குணமடைந்தோர்
|
17
|
|
சிகிச்சையில் உள்ளவர்கள்
|
19
|
|
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை
|
18
|
|
மரணம்
|
1
|
இவர்களில் 16 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். ஒருவர் உயிரிழந்தார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் இருந்த 5 வயது குழந்தை வீடு திரும்பியது. இதையடுத்து குணமானோர் எண்ணிக்கை 17 ஆனது. சென்னையில் உள்ள குலசேகரம் பெண்ணை தவிர ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு நடந்த பரிசோதனையில் மும்பை தாராவியில் இருந்து வந்த குழித்துறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையில் இருந்து வந்த எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது.
இதனால் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆனது.தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. இன்னும் வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பாதிப்பு கூடும் என அச்சம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.
















No comments