இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் வரும் தகவல்கள்...
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் வரும் தகவல்கள் துரதிருஷ்டமானவை என்று அமெரிக்க அரசின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதர் சாம் பிரவுன்பேக் கூறி உள்ளார்.
![]() |
| International Religious Freedom (IRF) Ambassador Sam Brownback |
மேலும் இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் மிகைப்படுத்தி பொய் செய்தியாகவும், தவறான விவரங்களுடனும் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு மதம், மொழி, நாடு என்ற எந்த வேறுபாடும் கிடையாது என்றும், இந்த விஷயத்தில் யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் இந்திய பிரதமரும் மற்றும் உயர் அதிகாரிகள் கூறி இருப்பது அமெரிக்காவுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

















No comments