குமரி மாவட்டத்திலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்...
குமரி மாவட்டத்திலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

வருகிற மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிக் கொடை திருவிழா துவங்குகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தங்கத்தேர் பவனி கடந்த 2 வருடங்களாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் திருக்கோவில்களின் ஆணையர் தங்கத்தேர் பவனி நடத்த உத்தரவை வழங்கினார்.
இதைதொடர்ந்து கோவிலில் தங்கத்தேர் பவனி நேற்று நடைபெற்றது. இந்த பவனியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தங்கத்தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
















No comments