Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

பள்ளியாடி அருகே சிவாலய பக்தர் ரெயில் மோதி பலி

கிள்ளியூர் அருகே பைங்குளம் அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதா கிருஷ்ணன் (வயது 48). இவர் அந்த பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் ...

கிள்ளியூர் அருகே பைங்குளம் அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதா கிருஷ்ணன் (வயது 48).
இவர் அந்த பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அஜிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. சுதாகிருஷ்ணன் நேற்று அவரது உறவினர்களுடன் சிவராத்திரியையொட்டி நடந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

திருவிதாங்கோடு மகாதேவர் கோவிலுக்கு சென்றுவிட்டு திருப்பன்றிக் கோடு மகாதேவர் கோவிலுக்கு செல்வதற்காக சுதாகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் இன்று அதிகாலை தயாரானார்கள். பள்ளியாடி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக சென்றால் விரைவில் சென்றுவிடலாம் என்பதற்காக அந்த வழியாக சென்றனர்.
அதிகாலை நேரத்தில் ஏராளமான பக்தர்கள் தண்டவாளம் ஓரத்தில் வரிசையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ரெயில் சுதா கிருஷ்ணன் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். சுதாகிருஷ்ணன் பலியானது குறித்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சுதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்