தக்கலை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஆண்டுப் பெருவிழா 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு 18 ஆயிரம் ...
தக்கலை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஆண்டுப் பெருவிழா 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு 18 ஆயிரம் பாடல்களை இயற்றியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஆவார். தென்காசியில் பிறந்து தக்கலையில் மறைந்துள்ள இவரது ஆண்டுவிழா தக்கலை அஞ்சுவன்னம் பீர் முஹம்மதியா அசோசியேஷன் சார்பில் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா அசோசியேஷன் நிர்வாகப் பொறுப்பு தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் உள்ளது.
இதன் நிர்வாக அதிகாரியாக வக்பு வாரிய கண்காணிப்பாளர் தாரிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து விழா கமிட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த ஆண்டு விழா வருகிற 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மார்க்கப் பேருரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
1 மற்றும் 2-ம் தேதிகளில் தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி பேராசிரியர் முஹம்மது முஸ்தபா, 3-ம் தேதி மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி, 4-ம் தேதி அதிராமபட்டணம் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன், 5 மற்றும் 6-ம் தேதிகளில் மவ்லவி செய்யது அப்[தாஹிர், 7 மற்றும் 8-ம் தேதிகளில் சென்னை கோடம்பாக்கம் ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் உமர் ரிஸ்வான் ஸித்தீகி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் மார்க்க பேருரையாற்றுகிறார்கள்.
9-ம் தேதி இரவு 9 மணிக்கு ஞானப்புகழ்ச்சி பாடுதல் தொடங்கி மறுநாள் (10-ம் தேதி) அதிகாலை வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மூன்றாம் ஸியாரத் நேர்ச்சை வழங்கப்படுகிறது.
















No comments