களியக்காவிளை அருகே பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் நாயர். விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டில் வளர்த்துவரும் பசுமாடு, இரு ந...
களியக்காவிளை அருகே பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் நாயர். விவசாயம் செய்து வருகிறார்.

இவரது வீட்டில் வளர்த்துவரும் பசுமாடு, இரு நாட்களுக்கு முன் கன்று ஈன்றது. அந்த கன்று இரண்டு தலை, 4 கண்கள், 2 நாக்குகளுடன் பிறந்தது. இதனால் அதற்கு பால் குடிக்க முடியவில்லை.
இதுகுறித்து, அவர் பாறசாலை கால்நடை பராமரிப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த அதிகாரிகள் கன்று குட்டிக்கு ஊசி மூலம் மருந்து கொடுத்து விட்டு பாட்டிலில் பால் கொடுக்கும்படி விவசாயிடம் கூறினர்.
வித்தியாசமான உருவத்துடன் பிறந்த கன்றுக்குட்டியை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
















No comments