மண்டைக்காடு மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 26 முதல் 15 நாட்களுக்கு திங்கள்நகர் பஸ்நிலையம் தற்காலிகமாக செயல்படும் என பேரூராட்ச...
மண்டைக்காடு மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 26 முதல் 15 நாட்களுக்கு திங்கள்நகர் பஸ்நிலையம் தற்காலிகமாக செயல்படும் என பேரூராட்சிகளின் தலைமை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திங்கள்நகரில் ரூ.5.85 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பணி முடியும் தருவாயில் உள்ளது. பஸ் நிலையத்தில் தரைத்தளம் மட்டுமே போட வேண்டி உள்ளது.
இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி அதிகப்படியான பக்தர்கள் திங்கள்நகர் வழியாக வந்து செல்வர். இதனால் தற்போதுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பக்தர்கள் அவதிக்குள்ளாக நேரிடும்.
எனவே விழா முடியும் வரை புதிய பேருந்து நிலையத்தை தற்காலிகமாக திறந்து செயல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பேரூராட்சிகளின் தலைமை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் திங்கள்நகர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்நகர் புதிய பேருந்து நிலையம் வரும் 26-ம் தேதி முதல் தற்காலிகமாக 15 நாட்களுக்கு அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் பஸ் நிலையம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் கடைகள் கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறினார்.
















No comments