Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

புதுக்கடை அருகே தனியார் பள்ளி ஊழியருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் சவுதி அரேபியா முகவரி

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மாங்காடு பகுதியை சேர்ந்தவர் நேசையன். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார...

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மாங்காடு பகுதியை சேர்ந்தவர் நேசையன். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பால்தங்கம். இவர் கடந்த நவம்பர் 3-ம் தேதி சின்னத்துறை அருகே கடலில் மூழ்கி இறந்தார்.
நேசையன் குடும்பம் ஏழ்மையில் இருந்து வருவதால், பால்தங்கம் இறந்ததை தொடர்ந்து, தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்.
இதற்காக ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை உட்பட ஆவணங்களை ராஜேஷ் குமார் எம்எல்ஏவிடம் அளித்திருந்தார். அவர் ஆவணங்களை பரிசோதித்தபோது, ஸ்மார்ட் கார்டில் உள்ள முகவரி அதிர்ச்சி அளித்தது. அதில் சவுதி அரேபியா, மஸ்க்கட், விளவங்கோடு வட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என இருந்தது. ஆதார் கார்டில் முகவரி சரியாக இருந்தது.

ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டாக மாற்றம் செய்தபோது தவறுதலாக அச்சுப்பிழை ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனை நேசையன் வீட்டார் முதலில் கவனிக்காமல் இருந்து விட்டனர்.
இதையடுத்து நேசையன் தனது ஸ்மார்ட் கார்ட் முகவரியை ஆதார் கார்டில் உள்ளது போல் மாற்றம் செய்ய கேட்டு கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கணினியில் தற்போதைய முகவரிக்கு மாற்றினர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்